இலங்கை அதிபர் பதவிக்கு வரும் ஜனவரி மாதம் 8-ம்தேதி நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் மகிந்த ராஜபக்சேவை எதிர்த்து பொதுவேட்பாளராக போட்டியிடப்போவதாக ராஜபக்சே மந்திரிசபையில் சுகாதாரத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்த மைத்ரிபாலா சிறீசேனா அறிவித்தார்.
இதனையடுத்து, அவரை அமைச்சரவையில் இருந்து ராஜபக்சே நீக்கினார். தலைநகர் கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரிபாலா சிறீசேனா, ‘இந்த தேர்தலில் மக்கள் என்னை தேர்ந்தெடுத்தால் நூறே நாட்களில் அதிபரிடம் குவிந்துக் கிடக்கும் அதிகாரங்களை குறைக்க நடவடிக்கை எடுப்போம். சுதந்திரமான நீதித்துறை மற்றும் தேர்தல் நடைமுறைகளை உருவாக்குவோம். நாட்டில் உண்மையான பத்திரிகை சுதந்திரத்தை மீண்டும் நிர்மாணிப்போம்’ என்று உறுதியளித்தார்.
ராஜபக்சேவுக்கு அடுத்தபடியாக அவரது மந்திரிசபையில் இரண்டாவது ஸ்தானத்தில் உள்ள மூத்த அரசியல்வாதியான மைத்ரிபாலா சிறீசேனா (63), ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கியது ஆளும் கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மைத்ரிபாலா சிறீசேனாவுக்கு ஆதரவு தெரிவித்த மேலும் 4 மந்திரிகளை தனது மந்திரிசபையில் இருந்து ராஜபக்சே நீக்கினார். இந்நிலையில், ராஜபக்சே தலைமையிலான மந்திரிசபையில் இருந்து அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை மந்திரியாக இருந்துவந்த ரிஷத் பதியுதீன் என்பவரும் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பதவி விலகியதோடு மட்டுமின்றி, இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபாலா சிறீசேனாவை ஆதரித்து அதிரடியாக பிரசாரம் செய்யப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இலங்கை முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்துவந்த அனைத்து சிலோன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜபக்சேவின் கூட்டணி மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த ரிஷத் பதியுதீன் ராஜினாமா செய்ததையடுத்து, அதே கட்சியை சேர்ந்த மற்றொரு எம்.பி.யான அமிர் அலி என்பவரும் ராஜபக்சேவை எதிர்த்தும், மைத்ரிபாலா சிறீசேனாவை ஆதரித்தும் பிரசாரம் செய்யப்போவதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் மைத்ரிபாலா சிறீசேனாவை ஆதரிப்பதாக தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி சமீபத்தில் அறிவித்ததையடுத்து, ஏற்கனவே நடுங்கிப்போய் உள்ள ராஜபக்சேவுக்கு, அங்குள்ள சிறுபான்மை மக்களின் ஆதரவு பெற்ற சிலோன் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக இன்று அறிவித்துள்ளது பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment