மண்ணள்ளி கொடுத்தாலும் மாரியாத்தா பிரசாதம்னு வாங்கி பூசிக்கிற ரசிகர்கள் இருக்கிற வரைக்கும் விதவிதமான செய்திகள் வந்துகிட்டேதான் இருக்கும். லேட்டஸ்ட் உதாரணம் த்ரிஷாவுக்கு கல்யாணம் என்பது! இன்னும் கொடுமை, இதை அவரே தன் வாயால் சொன்னது போல செய்திகள் வெளியானதுதான்.
ரஜினிக்கு ஜோடியாகிறார். அஜீத்தோடு டூயட் பாடுகிறார் என்று நாளெல்லாம் பிசியாகதான் இருக்கிறார் த்ரிஷா. அதுமட்டுமல்ல, தென்னக மொழிகள் அத்தனையிலிருந்தும் அழைப்புகள் வருகிறது அவருக்கு. இந்த நேரத்தில் கழுத்தில் லைசென்ஸ் மாட்டிக் கொள்ள அவருக்கென்ன பித்தா பிடித்திருக்கிறது? ஒரு சாதாரண ரசிகனே இப்படி கொந்தளிக்கும் போது த்ரிஷாவின் அம்மா மட்டும் சும்மாவா இருப்பார்?
யாரு கிளப்பிவிட்டதுன்னே தெரியலைப்பா. நாங்க உண்டு, எங்க வேலை உண்டுன்னு இருக்கோம். எங்க மொபைல் நம்பர் எல்லாருகிட்டயும் இருக்கு. அப்படியான்னு ஒரு வார்த்தை கேட்டுட்டு எழுதலாமே! இனிமே யாராவது இப்படி எழுதினா சும்மாயிருக்க மாட்டேன். அவங்க மேல கேஸ் போடுவேன் என்று நெருக்கமானவர்களிடம் ஆவேசப்படுகிறாராம்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment