சென்னை 28 ஐ தவிர எஸ்.பி.பி சரண் தயாரித்த எல்லா படங்களும் கீழே விழுந்து முட்டியை பேர்த்துக் கொண்டவைதான். காயத்திற்கு மருந்து போட, காமத்தை விட்டால் வேறு வழி?
இதற்கு முன்னுதாரணமாக முகத்திற்கு எதிரே நடமாடிக் கொண்டிருப்பவர் பார்த்திபன். பல நல்ல படங்கள் எடுத்து கடனில் மூழ்கிய அவர், 'உள்ளே வெளியே' என்ற ஒரே படத்தின் மூலம் அதல பாதாளத்திலிருந்து மீண்டெழுந்தார். அவரைப் போலவே தப்பிக்கும் நோக்கத்தோடுதான் ஆரண்ய காண்டம் படத்தையும் எடுத்திருக்கிறார் சரண்.
ஆபாச இரட்டை அர்த்த வசனங்கள் படம் முழுக்க இருக்கிறதாம். இதற்கெல்லாம் அனுமதிக்காத சென்சார் அமைப்பு ஐம்பதுக்கும் மேற்பட்ட 'கட்'டுகள் கொடுக்க, கட்டுவிரியன் போல சிலிர்த்துக் கொண்டு எழுந்துவிட்டார் சரண். மேல் முறையீட்டுக்காக விண்ணப்பித்திருக்கிறாராம்.
இவரைப் போலவே சென்சாரின் முரட்டுப் பிடியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கும் பலரும் சரணுக்கு போன் போட்டு உசுப்பேற்றிக் கொண்டிருக்கிறார்களாம். சில முன்னணி இயக்குனர்கள் டைரக்ட் செய்த படங்களில் மட்டும் து£---யைக் குடி, ம--ரு போன்ற வசனங்களை அனுமதிக்கும் சென்சார் மற்ற படங்களில் மட்டும் கண்டிப்பு காட்டுவது ஏன் என்கிறார்கள் அவர்கள்.
வெங்காய விஷயத்துல உரிக்கறது விரலுன்னாலும், உறுத்துறது கண்ணுதானே! தயாரிப்பாளரோட வயிற்றெரிச்சலையும் புரிஞ்சுக்கங்க சாருங்களா....!
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment