நர்த்தகி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் ஒளிப்பதிவாளர் கேசவன், இந்த விழாவுக்கு நான் அழைத்த முன்னணி ஹீரோக்கள் வரவில்லை. வெற்றிவிழாவில் அவர்கள் யாரென்பதை சொல்கிறேன் என்று ஆவேசப்பட்டிருந்தார். வெகு எளிதாக யூகித்துவிடலாம் அவர் யாரை சொன்னார் என்பதை.
நந்தா படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் கேசவன். அறிந்தும் அறியாமலும் படத்தின் தயாரிப்பாளர்தான் நர்த்தகி படத்தின் தயாரிப்பாளரான புன்னகைப்பூ கீதா. அப்படியிருக்கும் அந்த இன்னொரு ஹீரோ ஆர்யாதான் என்பதையும் எளிதாக யூகிக்கலாம். என்ன கட்டாயமோ? இப்போது பாய்ந்து அடித்துக் கொண்டு ஒரு அறிக்கை அனுப்பியிருக்கிறார் கேசவன். அதில் கூறப்பட்டிருப்பதாவது-
சூர்யா, ஆர்யா இருவரையும் குறிப்பிட்டுதான் அப்படி பேசியதாக செய்திகள் வந்துவிட்டது. ஆனால் இருவரும் விழா நடந்த நாளில் ஊரிலேயே இல்லை என்பது எனக்கு தெரியும். அவர்கள் இருவரும் இதை முன்னாலேயே என்னிடம் சொல்லிவிட்டார்கள். நான் குறிப்பிட்டு பேசியது அவர்களை அல்ல. வேறு ஒரு நடிகரைதான் நான் அப்படி குறிப்பிட்டேன். அவர் யாரென்பதை நர்த்தகி படத்தின் வெற்றி விழாவில் குறிப்பிடுவேன் என்று கூறியிருக்கிறார் கேசவன்.
அவர் யாரை சொல்கிறார் தெரியுமா? புன்னகைப்பூ கீதா தயாரித்த பட்டியல் படத்தில் இன்னொரு நாயகனாக நடித்த பரத்தைதான்! (கடைசியா அவரையும் நான் சொல்லல என்று க்ளைமாக்சை முடிச்சிராதீங்க சார்...)

No comments:
Post a Comment