ஆயிரத்தில் ஒருவன் படத்திற்காக சுமார் இரண்டு வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார் பார்த்திபன். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீர். அதன்பின் வித்தகனுக்காக ஒன்றரை வருடங்கள். அதற்கும் அதே நிலைமைதான். படம் வருமா? வராதா? என்பதே தெரியாத சூழ்நிலையில் தொடர்ந்து வேறு படங்களில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் புதுமைப்பித்தன்.
மேலே சொன்ன தடங்கல்களுக்கு பிறகு அவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் 3டி படம்தான் அம்புலி. ஓர் இரவு என்ற திகில் படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி ஷங்கர், ஹரிஷ் நாராயண் ஆகியோர் இயக்குகிறார்கள்.
இப்படத்தில் கிராமத்து இளைஞனாக நடிக்கிறார் பார்த்திபன். கிராமபுறங்களில் மக்களிடையே இருக்கிற வினோத பழக்கம் கட்டுக்கதைகளை நம்புவதுதான். மக்களும் இந்த கதைகளுக்கு அஞ்சி நடுங்குவார்கள். அந்த கட்டுக்கதைகள் நிஜமில்லை என்று புரிய வைப்பதற்காக இரு இளைஞர்கள் முயல்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் விபரீத அமானுஷ்ய சங்கதிகள்தான் இந்த படத்தின் கதை.
23 வருடங்களுக்கு முன் வந்த மைடியர் குட்டிசாத்தான் படத்திற்கு பிறகு நேரடி 3டி படங்கள் தமிழில் தயாரிக்கப்படவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கும் என்கிறார்கள் இந்த இரட்டை இயக்குனர்கள்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

பார்த்திபன் ஒரு வித்யாசமான மனிதர்தான்.
ReplyDelete