'யுத்தம் செய்' படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கப் போகும் படம் லிங்குசாமியின் கம்பெனிக்குதான்! ஆனால் மிஷ்கினின் அலட்டலால் அந்த வாய்ப்பு ஊசலாடிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். என்னவாம்?
இந்த படம் கராத்தே தொடர்பான சம்பவத்தை அடிப்படையாக கொண்டதாம். அதற்காக கராத்தேவில் புகழ் பெற்று விளங்கும் சீனாவுக்கு போய் சில நாட்கள் தங்கியிருந்து அந்த கலையை நேரில் கண்டு அனுமானிக்க வேண்டும் என்றாராம் மிஷ்கின்.
அங்கு கராத்தே வீரர்களுக்காக ஒரு கோவிலே இருக்கிறது. ஷாவ்லின் டெம்ப்பிள் என்று அழைக்கப்படும் அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். இலை, மற்றும் சருகுகள் மீது கூட சத்தமில்லாமல் நடக்க நடைபழகும் வீரர்களை நேரில் கண்டு பேச வேண்டும். பிறகுதான் அதுபற்றி படம் எடுக்க முடியும் என்றாராம் மிஷ்கின்.
இதெல்லாம் ஓ.கே. இதற்காக ஆகும் செலவை கணக்கிட்டு பார்த்த கம்பெனி தரப்பு சற்றே அதிர்ச்சியாகியிருக்கிறதாம். வேறொன்றுமில்லை, மிஷ்கின் போட்டுக் கொடுத்த பில்லின் தொகை சுமார் முப்பத்தைந்து லட்சங்கள்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment