கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த எஸ்எம்எஸ் அது. சிலருக்கு வியப்பையும் சிலருக்கு அதிர்ச்சியையும் கொடுத்த அந்த குறுந்தகவலில் இருந்த செய்தி கொஞ்சமே கொஞ்சம்தான். "நடிகை சரண்யா மோகனுக்கு இனி எந்த தயாரிப்பாளரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம். அவரை படத்தில் ஒப்பந்தம் செய்யவும் வேண்டாம். இப்படிக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்". தனது சங்க உறுப்பினர்களுக்கு அவர்கள் அனுப்பியிருந்த இந்த குறுந்தகவலின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருந்தது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் விசாரித்தபோது பிரச்சனை இங்கல்ல, கேரளாவில் என்பது மட்டும் புரிந்தது. அந்த சங்கம் கேட்டுக் கொண்டதால்தான் இங்கேயும் தடையாம்.
'நடிகைகளில் அவர் நந்தவனம். நடமாடும் பிருந்தாவனம்' என்றே வர்ணிப்பார்கள் ரசிகர்கள். அந்தளவுக்கு இளம் வயதிலேயே பலரையும் கவர்ந்தவர். கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையோடு அறிமுகம் ஆகி இன்னமும் அதில் உறுதியாக இருக்கிறார். நல்ல கதையாக இருந்தால் மட்டுமே அதில் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பதால் அவர் இழந்த லட்சங்களும் அதிகம். இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் அழகர் சாமியின் குதிரை இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரவிருக்கிறது. இந்த நேரத்தில் இதென்ன அணுகுண்டு?
கேரளாவில் இருக்கும் சரண்யா மோகனை பலமுறை தொடர்பு கொண்டும் அவரது செல்போன் சுவிட்ச்டு ஆஃப். ஒருவழியாக கேரளவில் உள்ள பத்திரிகை நண்பர்களை தொடர்பு கொண்டு செய்தியின் பின்புலத்தை அறிந்தோம். ஏதோ ஒரு மலையாள படத்தில் நடித்தாராம் சரண்யா. அதில் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கலில் இவரே ஒரு தொகையை திருப்பி தர வேண்டியிருந்ததாம். அதற்காக ஒரு காசோலையும் கொடுத்திருந்தார். செக் பேங்குக்கு வரும்போது இவர் தரப்பிலிருந்து ஸ்டாப் பேமெண்ட் கொடுத்துவிட்டார்களாம். இதனால் ஆத்திரமுற்ற தயாரிப்பாளர் அம்மாநில தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய நடிப்புக்கே தடை என்கிற அளவுக்கு போனது நிலைமை!
பேச்சு வார்த்தை முடிந்து தடையும் நீங்கிவிட்டது என்றார்கள் அவர்கள். அப்பாடா நிம்மதி!

No comments:
Post a Comment