இருவருமே விவாகரத்துக்கு சம்மதித்துள்ளதால் பிரபுதேவாவுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்புக்கு பின் நயன்தாரா-பிரபுதேவா திருமணம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து பிரபுதேவா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
கேள்வி:- உங்கள் காதல் வாழ்க்கை மனைவியை பிரிதல், இருவரும் மனம் ஒத்து விவாகரத்து கேட்பது பற்றியெல்லாம் நிறைய செய்திகள் வருகிறதே?
பதில்:- என் சொந்த வாழ்க்கையில் நடந்தவை எல்லாமே விதிப்படிதான் நடந்துள்ளன என்று நான் நம்புகிறேன். பள்ளியில் படித்த போன எனக்கு நன்றாக படிப்பு வரவில்லை. அதனால் டான்ஸ்மாஸ்டர் ஆனேன். பிறகு நடிகரானேன். இப்போது இயக்குனராகி இருக்கிறேன். எனவே விதிப்படி எனக்கு நடக்கும் என்று எழுதி இருந்தால் அது நடக்கும்.
கேள்வி:- உங்கள் சொந்த வாழ்க்கை இப்போது எப்படி உள்ளது?
பதில்:- நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். வாழ்க்கை நன்றாக போகிறது. என்னை சுற்றி உள்ள மக்களை மகிழ்ச்சி படுத்துவதே என் விருப்பம். வாழ்க்கையில் எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.
கேள்வி:- நீங்கள் நயன்தாராவை திருமணம் செய்வது பற்றி செய்திகள் வருகிறதே?
பதில்:- தற்போதைய சூழலில் நான் எந்த பரபரப்பு செய்தியையும் உருவாக்க விரும்பவில்லை. வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமே நேரம், இடம் என்று உள்ளது. சரியான நேரம் வரும்போது எல்லாம் நடக்கும்.
கேள்வி:- காதலர் தினத்தில் என்ன செய்து கொண்டு இருப்பீர்கள்?
பதில்:- மும்பையில் இந்திப்பட கிளைமாக்ஸ் சீன்கள் பற்றி விவாதித்துக் கொண்டு இருப்பேன்.

No comments:
Post a Comment