ஆண்டாண்டு காலமாக படப்பிடிப்புகளுக்கு ஏற்ற இடமாக விளங்குவது தமிழகத்தின் ஒரு சில பகுதிகள்தான். அதில் மிக முக்கியமான ஊர் தென்காசி. இதே பெயரில் ஒரு படத்தையே எடுத்திருக்கிறார்கள் இப்போது! தென்காசி பக்கத்துல... என்பதுதான் அந்த படத்தின் பெயர்.
இப்படத்தின் கதை என்ன? ஜமீன் பரம்பரையில் நடக்கிற அதிர்ச்சியான விஷயங்களைதான் கதைக் கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் புதுமுக இயக்குனர் ஏ.ஆன்ட்டனி. குல கவுரவத்திற்காக என்ன வேணும்னாலும் செய்வோம்டா என்று மார் தட்டுகிறார் ஒரு பெண். அது என்ன என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ் என்கிறார் ஆன்ட்டனி.
1972 ம் ஆண்டில் நடப்பது போல கதை அமைந்திருப்பதால், இதை பீரியட் பிலிம் என்ற வகையில் சேர்க்கலாம். இதுபோன்ற படங்களை எடுப்பதுதான் ஆர்ட் டிபார்ட்மென்ட்டுக்கு சவாலான விஷயம். இதற்காக ஏராளமான விஷயங்களை சேகரித்து கொண்டு வந்தார்களாம் அவர்கள். புதுமுகங்கள் மட்டுமே நடிக்கிற இப்படத்தில் தொலைக்காட்சி புகழ் கன்யாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும். தப்பு பண்ணினா தண்டனை நிச்சயம் என்பதுதான் படத்தின் முக்கியமான மெசெஜ் என்கிறார் ஆன்ட்டனி. இவர்கள் கொடுக்கிற பில்டப்பை பார்த்தால் படம் தப்பு பண்ணாது என்றுதான் தோன்றுகிறது.
- நானே ஹீரோயின்...நானே டைரக்டர்...பிரபல நடிகையின் அத...
- பாண்டு மாஸ்டரான உதயநிதி ஸ்டாலின்!
- விஜய் நடிக்கு 'நண்பன்'னும் நகுல், சாந்தனு நடிக்கும...
- கதாநாயகிகளின் கவர்ச்சி பற்றி ஸ்ரேயா
- உலக கோப்பையில் நாக்க முக்க விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி...
- நார்வே தமிழ் திரைப்பட விழா: எந்திரன், அங்காடித் தெ...
- தொழிலதிபரை மணக்கும் மகேஷ் பூபதியின் முன்னாள் மனைவி...
- நமீதாவை வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன...
- 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி 'பேசும்' ரஜினி!
- ராஜபக்சே கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள்
- அனுஷ்காவின் தாராள மயமாக்கக் கொள்கை!

No comments:
Post a Comment