திரைக்கதை திலகம்தான். ஆனால் அதெல்லாம் ஒரு காலம் என்று சினிமாக்காரர்களே உச் கொட்டுகிற அளவுக்குதான் இருக்கிறது கே.பாக்யராஜின் தற்போதைய திறமை! தங்கமாகவே இருந்தாலும் ஒரு கால கட்டத்துக்கு பிறகு மங்கித்தான் போகும் என்பதற்கு இவரை விட சிறந்த உதாரணம் கிடையாது.
ஆனால் இவரை பிரமித்தவர்கள் இப்போதும் பாக்யராஜுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆவலோடு சுற்றி வருவார்கள். அப்படி சுற்றி சுற்றி வந்தவர்களில் ஒருவர்தான் களவாணி சற்குணம். முதல் படத்திலேயே இவரைதான் இளவரசு கேரக்டரில் நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாராம். என்ன காரணத்தாலோ அது நிறைவேறவில்லை.
தற்போது இவர் இயக்கப் போகும் வாகை சூட வா படத்தில் ஒரு முழு நீள கேரக்டர் கொடுத்திருக்கிறாராம் கே.பாக்யராஜுக்கு. விமலுக்கு அப்பாவாக நடிக்கப் போகிறார் திரைக்கதை திலகம். இது ஒருபுறம் இருக்க, படத்திற்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் ஒரு செட் போடப் போகிறார்களாம். இன்னொரு ஆச்சர்யம், இப்படத்தை யார் உதவியும் இல்லாமல் தானே தயாரிக்கப் போகிறார் சற்குணம்!
ஹ்ம்ம்ம்... தைரிய திலகம்!
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment