இங்கிலாந்தில் சிறந்த சினிமா படங்களுக்கு வழங்கப்படும் பாப்டா விருது வழங்கும் விழா லண்டனில் நேற்று நடந்தது. இந்த விழாவை பிரிட்டிஷ் அகடாமி ஆப் பிலிம் மற்றும் டெலிவிஷன் ஆர்ட்ஸ் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தன.
இதில், “தி கிங்ஸ் ஸ்பீச்” என்ற ஆங்கில படம் “பாப்டா” விருது பெற்றது. அது தவிர சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், துணை நடிகை உள்பட 6 விருதுகளை பெற்றது.
இப்படத்தில் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய தற்காக காலின் பிர்த் சிறந்த நடிகர் விருது பெற்றார்.இதில் அவர் 6-வது ஜார்ஜ் மன்னன் வேடத்தில் நடித்து இருந்தார். இதே படத்தில் நடித்த ஜியாப்ரி ரஷ்க்கு சிறந்து துணை நடிகர் விருதும், ஹெலனா பான்கம் கார்டருக்கு சிறந்த துணை நடிகை விருதும் கிடைத்தது.
சிறந்த திரைக்கதை, சிறந்த இசைக்கான விருதும் இந்த படத்துக்கு வழங்கப்பட்டது. இப்படத்தை டாம் ஹுப்பர் டைரக்டு செய்துள்ளார். இப்படம் 14 விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது.சிறந்த நடிகைக்கான விருது நடாலி போர்ட்மானுக்கு கிடைத்தது. “பிளாக் சுவான்” என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்தது.
சிறந்த டைரக்டருக்கான விருது டேவிட் பின்சருக்கு கிடைத்தது. இவர் “தி சோஷியல் நெட்வொர்க்” படத்தை இயக்கி உள்ளார். இப்படம் சிறந்த எடிட்டிங், சிறந்து கதை வசனத்துக்கான விருதுகளையும் பெற்றது.
“இன்செப்சன்” படத்துக்கு சிறந்து “விஷுவல் எபெக்ட்ஸ்” விருதும், சிறந்த அனிமேஷன் பட விருது “டாய் ஸ்டோரி-3” என்ற படத்துக்கும் கிடைத்தது. கடந்த ஆண்டு நடந்த பாப்டா விருதில் சிறந்த நடிகருக்கான விருதை “சிங்கிள்மேன்” என்ற படத்துக்காக பெற்றார்.
“பாப்டா” விருது பெற்றுள்ள “தி கிங்ஸ் ஸ்பிச்” படம் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment