அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார். தமிழக திரையரங்குகளில் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சரத்குமார்,
பல ஆண்டுகளுக்கு முன் தமிழக திரையரங்குகளில் படம் முடிந்ததும் தேசியகீதம் இசைக்கும் வழக்கம் இருந்தது. படம் முடிந்து வெளியேறும் அவசரத்தில் பெரும்பாலான மக்கள் தேசியகீதம் முடியும் வரை நின்று மரியாதை செலுத்துவதில்லை என்ற காரணத்தால் தேசியகீதம் இசைக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டது.
மும்பை உள்ளிட்ட நகரங்களில் படங்கள் தொடங்குவதற்கு முன்பே தேசியகீதம் இசைக்கப்படுவது போல தமிழக திரைய்ரங்குகளிலும் விளம்பரங்கள் முடிந்தபிறகு படங்கள் தொடங்குவதற்கு முன்பே தேசியகீதம் இசைக்கபடவேண்டும்.
இன்றைய தலைமுறையினரிடமும், வருங்கால சந்ததியினர்களிடமும் நாட்டுப்பற்றை வளர்க்கவும், தேசியக்கட்டிக்கு தகுந்த மரியாதை கிடைக்கவும் தேசியகீதம் ஒலிக்கச்செய்ய வேண்டும். அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒருமுறையாவது ஒளிபரப்ப வேண்டும். மத்திய-மாநில அரசு இந்த கோரிக்கையை ஏற்று தகுந்த உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்
ஆட்டோ சங்கர் 3 (தொடர் )

No comments:
Post a Comment