நா.முத்துக்குமார்தான் இன்றைய கோடம்பாக்கத்தின் பரபரப்பான பாடலாசிரியர். கவிப்பேரரசு வைரமுத்துவையும், வாலியையும் கூட ஆச்சர்யமாக நோக்க வைக்கிற அளவுக்கு இருக்கிறது இவரது வேகம். அதை நிரூபிப்பது போலதான் இருக்கிறது இவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டியல். தான் பாடல் எழுதுகிற படங்கள் அத்தனையையும் அங்கு வைக்கப்பட்டுள்ள நோட்டீஸ் போர்டில் எழுதி வைப்பது அவரது வழக்கம். பொடி பொடி எழுத்துக்களில் எழுதினால் கூட போர்டு பத்தவில்லை என்கிறார்கள் அலுவலக ஊழியர்கள்.
இந்த அபரிமித வரவேற்பும் பரபரப்பும்தான் நா.முத்துக்குமாரை சற்று தடுமாற வைத்துவிட்டது போலும். ஏவிஎம் சரவணனை இப்போதும் முதலாளி என்றே அழைக்கிறார் சூப்பர் ஸ்டார். தமிழ்சினிமாவுலகில் அவருக்கும் அந்த நிறுவனத்திற்குமான மரியாதை குண்டுமணியளவு கூட குறையவில்லை.
இந்த நிறுவனம் இயக்கி வரும் முதல் இடம் படத்திற்கு பாடல் எழுத வருமாறு அழைத்தாராம் அப்படத்தின் இயக்குனர் குமரன். நீங்க புது இயக்குனர்தானே? என் ஆபிசுக்கு வரலாமே என்றாராம் நா.மு. இதை அப்படியே சரவணன் காதுகளுக்கு கொண்டு போனார் குமரன்.
நமது நிறுவனத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. அதை எந்த காலத்திலும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று கூறிய அவர், நா.முத்துக்குமாருக்கு பதிலாக அறிவுமதி, கபிலன், யுகபாரதி ஆகிய மூவரையும் அழைக்கும்படி ஆலோசனை சொன்னாராம்.
டி.இமான் இசையில் குமரன் நினைத்த மாதிரியே பாடல் கம்போசிங் நடந்து வருகிறது ஏவிஎம்மின் பரந்த வளாகத்திற்குள்ளே!
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

வசதி வாய்ப்பு வரும்போதும் பணிவாக இருக்கத்தெரிஞ்சுக்கனும்.
ReplyDelete