நடிகர் ராஜ்கிரணின் அந்தரங்கங்கள் தெரியும் என்பதால், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டும் ராஜ்கிரண், அவரது டிரைவர் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கராத்தே மாஸ்டர் ஒருவர் புகார் அளித்தார்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த கராத்தே மாஸ்டர் திருமலைமுத்துக்குமார் (43), சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கராத்தே மாஸ்டராக தொழில் நடத்தி வருகிறேன். 2002ம் ஆண்டு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அக்கா மகள்கள் பத்மஜோதி, முருகலா மற்றும் நாயுடுக்கு நெருங்கியவரான பிரபாகரன் ஆகியோரால் நடிகர் ராஜ்கிரணின் உதவியாளராக நான் நியமிக்கப்பட்டேன். அப்போது, ராஜ்கிரண், பத்மஜோதி, முருகலா ஆகியோர் ஈக்காட்டுத்தாங்கல், நவரத்தின கார்டனில் வசித்து வந்தனர். நான் ராஜ்கிரணின் ராமாபுரம் அலுவலகத்தில் தங்கியிருந்தேன். பத்மஜோதிக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தை இருக்கிறது.
பத்மஜோதியின் சொத்திற்கு ஆசைப்பட்டு, அவரை ராஜ்கிரண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரணிடம் நான் உதவியாளராக நியமிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமே ராஜ்கிரணின் செயல்பாடுகளை கவனித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தான். ராஜ்கிரண், இரண்டாம் திருமணம் செய்தது, முதல் மனைவிக்கு பல ஆண்டுகள் தெரியாது. இரண்டாவது திருமணம் செய்த பின் தான் முதல் மனைவியை ராஜ்கிரண் விவாகரத்து செய்தார். பத்மஜோதி, முருகலா ஆகியோர் கோடீஸ்வரிகள் என்பதால், பணத்திற்காக நல்லவனாக நடித்து ராஜ்கிரண் அவர்களை நம்ப வைத்தார்.
ஒரு வழக்கில் பத்மஜோதியை தந்திரமாக குற்றவாளியாக்கினார். இதன் மூலம் இருவருக்கும் பெரிய அளவில் பிரச்னை ஆரம்பமானது. ராஜ்கிரண், சினிமா ஏஜன்ட்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு தகாத உறவு வைத்துக் கொண்டது உள்ளிட்ட அவருடைய அனைத்து அந்தரங்கங்களையும் தெரிந்தவன் நான். திருந்தி வாழ்வதாகக் கூறி தன்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த விவகாரங்கள் பத்மஜோதி, முருகலா, பிரபாகரன் ஆகியோருக்கு தெரிந்தால் வீட்டை விட்டு துரத்திவிடுவர் என்றும், தன்னை மன்னிக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை தான் வரும் என, ராஜ்கிரண் என்னிடம் கெஞ்சினார்.
இந்நிலையில், முருகலாவை எனக்கு திருமணம் செய்து வைப்பதாக பத்மஜோதி உறுதியளித்தார். சிறையிலிருந்து வீட்டிற்கு வந்த பத்மஜோதி, முருகலாவை திருப்பதியில் வைத்து எனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார். அதற்குள் ராஜ்கிரண், முருகலாவை மடக்கி பிடித்து, முருகலா குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, ராஜ்கிரணின் உதவியாளராக இருக்கக் கூடாது என, என்னை விரட்டிவிட்டனர். முருகலாவையும், என்னையும் பிரிப்பதிலேயே ராஜ்கிரண் குறியாக இருந்தார். அவர்களோடு என்னால் மோத முடியவில்லை.
முருகலா வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கு காரணம் நான் தான் என்றும், ராஜ்கிரணின் அந்தரங்கங்களை அறிந்தவன் என்பதால், நான் போகும் இடமெல்லாமல் பின்தொடர்ந்து ராஜ்கிரணின் அடியாட்கள் மற்றும் அவரின் டிரைவர், "ராஜ்கிரண் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது; அதை மீறி இருந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டுகின்றனர். ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமாக மிரட்டல்கள் வருகின்றன. என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. தற்போது நந்தம்பாக்கம், டிபன்ஸ் காலனியில் கராத்தே பள்ளி நடத்தி வருகிறேன். அமைதியான முறையில் தொழில் நடத்த முடியவில்லை. ராஜ்கிரண், அவரது டிரைவர் மற்றும் அடியாட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, புகாரில் கராத்தே மாஸ்டர் திருமலைமுத்துக்குமார் கூறியுள்ளார். இப்புகாரை நந்தம்பாக்கம் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment