சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமான சசிகுமார், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என அசத்தி வருகிறார். தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சசி இப்போது மலையாள படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
மலையாள இயக்குநர் ஜானி ஆன்டனி இயக்கத்தில் உருவாகும் "மாஸ்டர்ஸ்" எனும் படத்தில் ப்ரித்திவிராஜின் நண்பனாக நடிக்கிறார். இருவரும் கல்லூரியில் படிக்கும் நண்பர்கள். கல்லூரி படிப்பை முடித்த பின்னர் இருவரும் வெவ்வேறு துறைக்கு போய்விடுகின்றனர். இருப்பினும் நல்ல நண்பர்களாக இருந்து சமூகத்திற்காக பாடுபடுகின்றனர்.இதுவே மாஸ்டர்ஸ் படத்தின் கதை. படத்தின் கதையை கேட்டதும், உடனே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சசிகுமார். ஏற்கனவே சசிகுமாரின் சுப்ரமணியபுரம் படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இப்போது இவரே நடிப்பது மலையாள ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது.
முன்னதாக சசிகுமாரின் நண்பரும், நாடோடிகள் படத்தின் இயக்குநருமான சமுத்திரகனி, மலையாளத்தில் ரொம்ப பிரபலம். மலையாளத்தில் மோகன்லால் நடித்த "சிகார்" படத்தில் நக்சலைட் தலைவராக சமுத்திரகனி நடித்திருந்தார். அவரது நடிப்பு மலையாள ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் சமுத்திரகனியை தொடர்ந்து சசிகுமாரும் மலையாள ரசிகர்களால் பெரிதும் கவருவார் என எதிர்பார்க்கலாம்.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

No comments:
Post a Comment