'அட்ரா அட்ரா நாக்க முக்க' என்ற ஒரே பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் அறியப்பட்டவர் பாடகி சின்னப் பொண்ணு. மதுரை சின்னப் பொண்ணு என்று கூறிவந்தார்கள் இவரை. ஆனால் இவரே தன்னை பற்றி சொல்லும்போது "எனக்கு தஞ்சாவூருதான் சொந்த ஊர். ஆனால் என்னை மதுரை சின்னப் பொண்ணுன்னு சொல்லி பழகிட்டாங்க. இனிமே தஞ்சாவூர் சின்னப் பொண்ணு என்று அழைத்தால் மகிழ்வேன்" என்றார் ஒரு மேடையில்.
இப்போது டைரக்டர்களை மாவட்ட வாரியாக பிரித்தாள்கிறது ஒவ்வொரு மேடையும். நாங்கள்ளாம் மதுரை தெரியுமா என்று அமீர் போன்ற பெரிய இயக்குனர்களே மார்தட்டிக் கொள்கிற அளவுக்கு மாவட்ட பாசம் கண்ணை மறைக்கிறது இவர்களுக்கு! அதற்கேற்றார் போல குழு மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள் அத்தனை இயக்குனர்களும். அந்த வகையில் கூட எடுத்துக் கொள்ளலாம் இந்த விஷயத்தை.
தஞ்சாவூரை சேர்ந்த டைரக்டர் சுப்ரமணிய சிவா, நாக்க முக்காவுக்கு கொஞ்சமும் குறைவில்லாத ஒரு ஃபாஸ்ட் பீட் பாடலை சின்ன பொண்ணுவை பாட வைத்து மீண்டும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் அவர் வாழ்க்கையில். இவர் இயக்கி வரும் சீடன் படத்தில் இடம்பெறும் பழனி முருகன் பற்றிய பாடல் ஒன்றை சின்னப் பொண்ணு பாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல, அந்த பாடலுக்கு பொறுத்தமாக அவரே ஆடியும் இருக்கிறார்.
தினாவின் ஐம்பதாவது படம் இது. திருடா திருடியில் மன்மத ராசா எந்தளவுக்கு ஹிட் ஆனதோ, அதைவிட பெரிய ஹிட் வேண்டும் என்றாராம் சிவா. அதற்கு பின்பு போடப்பட்ட ட்யூன்தான் இது. ட்யூனை முடிவு செய்தவுடனேயே இதை சின்னப் பொண்ணுதான் பாட வேண்டும் என்று முடிவெடுத்தாராம் தினா.
பாடலை கேட்டபின் இதில் அவரே நடிக்கட்டுமே என்று அந்த கதவையும் திறந்துவிட்டவர் சுப்ரமணிய சிவாதான். வாய்ப்பு கொடுத்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், நல்ல சம்பளத்தையும் கொடுத்தாங்க. ரொம்ப ரொம்ப நன்றி என்கிறார் சின்னப் பொண்ணு.
இதையும் படியுங்களேன் ....
பிரபலங்களின் முகத்திரையை கிழித்து உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் தொடர்

சின்னப்பொண்ணுகாட்ல அடடா மழை அடமழைதான்..
ReplyDelete