பிரபல இந்தி நடிகை யானா குப்தாவிற்கு நடன நிகழ்ச்சியின் போது மூக்கு உடைந்தது. இதனையடுத்து அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட உள்ளது.
தமிழில் அந்நியன் படத்தில் காதல் யானை... என்ற பாடலில் விக்ரமுடன் நடனம் ஆடிய யானா குப்தா, இந்தியில் பிரபல நடிகை. இவர் தனியார் டி.வி.ஒன்றில் ரியாலிட்டி டான்ஸ் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் யானா குப்தா நடனம் ஆடினார். அப்போது எதிர்பாரா விதமாக கீழே விழுந்து தனது மூக்கை உடைத்து கொண்டார். இருப்பினும் அதனை வெளிப்படுத்தாமல் நிகழ்ச்சியை முடித்த பின்னரே மருத்துவமனைக்கு சென்றுள்ளார். யானா குப்தாவை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:
Post a Comment