இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்காளதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் சச்சின் தெண்டுல்கர், சேவாக், கம்பீர், வீரட் கோக்லி, யுவ்ராஜ் சிங், தோனி, யூசுப் பதான், ஹர்பஜன் சிங், ஸ்ரீசந்த், ஜாகீர்கான், முனாப் பட்டேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ரெய்னா சேர்க்கப்படவில்லை.
3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக சேவாக்கும், தெண்டுல்கரும் களம் இறங்கினர். முதல் ஓவரை சேவாக் சந்தித்தார். முதல் பந்திலே பவுண்டரியுடன் ரன் கணக்கைத் துவக்கினார். சேவாக்கும் தெண்டுல்கரும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.
இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இந்தியா 8.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடிய சச்சின் 28 ரன்னில் ரன் அவுட்ஆனார். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 69 ரன்னாக இருந்தது.
அடுத்து சேவாக்குடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். சேவாக் சிறப்பாக விளையாடி 45 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்தியா 14.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. கம்பீர் 33 ரன் எடுத்திருக்கும்போது அவுட் ஆனார். அப்போது இந்தியா 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்திருந்தது.
அடுத்து 3-வது விக்கெட் ஜோடியாக சேவாக்குடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் வங்காளதேச பந்துவீச்சை விளாசிதள்ளினர். சேவாக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 94 பந்தில் 9 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.
அப்போது இந்தியா 31.2 ஓவரில் 200 ரன்னை தொட்டது. சிறப்பாக விளையாடி வந்த சேவாக் 175 ரன் குவித்து அவுட் ஆனார். அடுத்து யூசுப் பதான் களம் இறங்கினார்.
வீராட் கோலியும் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். கடைசி பந்தில் யூசுப்பதான் அவுட் ஆனார். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 370 ரன் குவித்தது. வீராட் கோலி 100 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
- நானே ஹீரோயின்...நானே டைரக்டர்...பிரபல நடிகையின் அத...
- பாண்டு மாஸ்டரான உதயநிதி ஸ்டாலின்!
- விஜய் நடிக்கு 'நண்பன்'னும் நகுல், சாந்தனு நடிக்கும...
- கதாநாயகிகளின் கவர்ச்சி பற்றி ஸ்ரேயா
- உலக கோப்பையில் நாக்க முக்க விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி...
- நார்வே தமிழ் திரைப்பட விழா: எந்திரன், அங்காடித் தெ...
- தொழிலதிபரை மணக்கும் மகேஷ் பூபதியின் முன்னாள் மனைவி...
- நமீதாவை வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன...
- 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி 'பேசும்' ரஜினி!
- ராஜபக்சே கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள்
- அனுஷ்காவின் தாராள மயமாக்கக் கொள்கை!

No comments:
Post a Comment