வெண்ணிலா கபடிக்குழு படத்தில் தான் ஒரு நல்ல இயக்குனர் என்று பேர் வாங்கியவர் சுசீந்திரன். அதன் பிறகு எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அழகர்சாமியின் குதிரை என்ற கதையை படமாக்க திட்டமிட்டார். ஆனால் நடிகர் கிடைக்கவில்லை, தயாரிப்பாளர் பிரச்சனை என படம் நிறுத்தப்பட்டது. தன் வெற்றியை மீண்டும் நிரூபிக்க நினைத்த சுசீந்திரன், நான் மகன் அல்ல படத்தை எடுத்தார். படத்தில் அதிக வன்முறை இருக்கிறது என விமர்சனங்கள் எழுந்தாலும் படம் ஹிட்.
அதன் பிறகு இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் அழகர்சாமியின் குதிரை படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து இப்போது படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான முயற்சியாகவே இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தை முழுதாய் எடுத்துவிட்டு இசைக்காக இளையராஜாவிடம் போட்டுக் காண்பித்திருக்கிறார் சுசீந்திரன். 'சொன்னக் கதையை எடுத்துவிட்டாய் சுசீ' என்று கை கொடுத்தாராம் இளையராஜா. படத்தின் விஷுவலைப் பார்த்து அதன் பிறகு தான் பாடல்கள் மெட்டமைக்கப் பட்டிருகிறது. படத்தின் முக்கியமான பாடலை ஒரு முக்கியமான பாடகர் பாடியிருக்கிறாராம். அது யார் என்று வெளியே சொல்லக் கூடாது என்று சுசீயிடம் கண்டிஷன் போட்டிருக்கிறாராம் இளையராஜா.
நான் இளையராஜாவின் இசை பிரியன் என்பதைவிட அவரின் இசை வெறியன் என்றே சொல்லலாம் என்கிறார் சுசீந்திரன். அதனால் தான் இளையராஜாவை வார்த்தைக்கு வார்த்தை 'அப்பா... அப்பா...' என்று குறிப்பிடுகிறார் சுசீ. இதற்கடுத்து விக்ரம் நடிக்கும் ஒரு ஜாலியான கமர்ஷியல் படத்தை இயக்குகிறார் சுசீந்திரன்.
- பிரபல நடிகைக்கு நடன நிகழ்ச்சியில் மூக்கு உடைந்தது
- உலககோப்பை கிரிக்கெட்: இந்தியா 370 ரன் குவிப்பு; சே...
- ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு ஷூட்டிங்!
- நானே ஹீரோயின்...நானே டைரக்டர்...பிரபல நடிகையின் அத...
- பாண்டு மாஸ்டரான உதயநிதி ஸ்டாலின்!
- விஜய் நடிக்கு 'நண்பன்'னும் நகுல், சாந்தனு நடிக்கும...
- கதாநாயகிகளின் கவர்ச்சி பற்றி ஸ்ரேயா
- உலக கோப்பையில் நாக்க முக்க விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி...
- நார்வே தமிழ் திரைப்பட விழா: எந்திரன், அங்காடித் தெ...
- தொழிலதிபரை மணக்கும் மகேஷ் பூபதியின் முன்னாள் மனைவி...
- நமீதாவை வைத்து சில்க்ஸ்மிதா வாழ்க்கையை படமாக்குவேன...
- 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி 'பேசும்' ரஜினி!
- ராஜபக்சே கொடும்பாவியை எரித்த ரஜினி ரசிகர்கள்

No comments:
Post a Comment