தெலுங்கு நடிகர் ராணாவும் ஸ்ரேயாவும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியாகி உள்ளன. இருவரும் வெளி நாடுகளில் சுற்றுவதாகவும் நட்சத்திர ஓட்டல்களில் ஒரே அறையில் தங்குவதாகவும் கூறப்படுகிறது.
ராணா பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் பேரன் ஆவார். “லீடர்” படம் மூலம் பிரபலமானவர். தற்போது இந்திப்பட மொன்றில் நடித்து வருகிறார். இந்த காதல் விவகாரம் பற்றி ஸ்ரேயாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
ராணாவை சிறு வயதில் இருந்தே எனக்கு தெரியும். இரு குடும்பத்தினருக்கும் நெருக்கமான தொடர்பு உள்ளது. ராணாவுக்கும் எனக்கும் இடையே இருப்பது வெறும் நட்புதான். எங்களுக்குள் காதல் இல்லை. என் கவனமெல்லாம் சினிமாவில்தான். காதல் பற்றி சிந்திக்கவே இல்லை.
தீபாமேத்தாவின் “மிட் நைட் சில்ரன்” என்ற படத்தில் நடித்து வருகிறேன். என் திரையுலக வாழ்க்கையில் இது வித்தியாசமான படம். அற்புதமான கேரக்டர். எப்போதும் நினைவில் வைத்துக் கொள்கிற மாதிரி இந்த படம் இருக்கும். நிறைய பட வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையம்சம் உள்ள படங் களில் நடித்து வருகிறேன்.
இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.
No comments:
Post a Comment