2020-ல் இந்தியா வல்லரசு ஆவது இளைஞர்களின் கையில்தான் உள்ளது. எனவே இந்த இலக்கை அடைய இளைஞர்கள் கனவு காண்பதுடன், முழு ஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும்’ என்று அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல்கலாம் அறிவுறுத்தி வருகிறார்.
மேலும், தன்னுடைய அனுபவம், கருத்து ஆகியவற்றைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள சமூக இணையதளமான பேஸ்புக்கில் www.facebook.com/officialkalam எனும் பக்கத்தை அவர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இதில் ஏராளமானோர் இணைந்து, கலாமின் கருத்துகளைக் படித்தும், அதற்கு தங்களின் உணர்வுகளையும், எண்ணங்களையும் பதிவு செய்தும் வருகின்றனர். அந்த வகையில், இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலாமின் பேஸ்புக் பக்கத்தில் இணைந்துள்ளனர்.
இதுபற்றி, கலாம் தனது பக்கத்தில், 'நண்பர்களுக்கு நன்றி. நாம் இப்போது 10 லட்சம் பேராக, வலிமை வாய்ந்த சமூகமாக உருவாகி உள்ளோம். எனவே, தங்களது சிறந்த கருத்து, கனவு மற்றும் செயல்பாடுகளை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள், என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment