Saturday, July 21, 2012

ஷங்கர், சந்தானம், பவர் ஸ்டார்.. குட் காம்பினேஷன்!


டிவி, இணையம், விழாக்கள் என அனைத்திலும் பவர் ஸ்டார் சீனிவாசன் என்றால் ஒரு தனி ஹிட்.

இவர் கலந்து கொண்ட விழாக்கள் அனைத்துமே YOUTUBE இணையத்தில் இவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபத்தில் இவரது ரசிகர், விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி குறித்து, " ஓடாத படங்களுக்கு எல்லாம் விருதுகள் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பவர்ஸ்டார் சீனிவாசன் நடித்த 'லத்திகா' படம் 225 நாட்களைக் கடந்து இருக்கிறது. அவருக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை "என்று 'வருத்தப்பட்டு' கூறியிருந்தார்.

ஆனால், தற்போது பவர் ஸ்டார் ரசிகர்கள் அனைவருமே கடும் குஷியில் இருக்கிறார்கள். இயக்குனர் ஷங்கர் இயக்க இருக்கும் ' ' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பவர் ஸ்டார் சீனிவாசன்.

' ' படத்தில் ஓரிரு காட்சிகளில் மட்டுமே தோன்ற இருக்கிறாராம் பவர். சந்தானம், பவர் ஸ்டார் இருவருமே அக்காட்சியில் நடிக்க இருக்கிறார்கள்.

பவர் ஸ்டார்சந்தானத்துடன் இணைந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.


No comments:

Post a Comment