Saturday, July 21, 2012

ரஜினி வேடத்தில் சிவா!


ரஜினிகாந்த் நடித்துள்ள படங்கள் மறுபடியும் ரீமேக்காவது ஒன்றும் புதிதல்ல. ரஜினி நடித்த 'பில்லா' படத்தினை அஜீத்தும், 'முரட்டுக்காளை' படத்தின் ரீமேக்கில் சுந்தர்.சி  நடித்து வெளிவந்தது.

அடுத்த ரஜினி படங்களின் ரீமேக் வரிசையில் 'தில்லு முல்லு', 'மன்மதலீலை' ஆகிய படங்கள் தான் தற்போதைய ஹாட் டாக்.

'தில்லு முல்லு' படத்தினை பல்வேறு தயாரிப்பாளர்களும் உரிமை கோரினார்கள். 'தில்லு முல்லு' படம் ரஜினி நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படமாகும். கே.பாலசந்தர் இயக்கிய இப்படத்தில் மீசையோடு ஒரு கெட்டப், மீசை இல்லாமல் ஒரு கெட்டப் என ரஜினி காமெடியில் கலக்கிய படம் 'தில்லு முல்லு'.

இப்படத்தின் ரீமேக் போட்டியில் வெற்றி பெற்று இருக்கிறது வேந்தர் பிலிம்ஸ். இப்படத்தில் ரஜினி வேடத்தில் நடிக்க 'சென்னை 28', 'தமிழ் படம்', 'கலகலப்பு' என காமெடியில் கலக்கி வரும் சிவாவை கேட்டு இருக்கிறார்கள்.


No comments:

Post a Comment