காதலுக்கு தடை விதித்த தந்தையை சுட்டு கொன்ற மகளையும், அவளது காதலனையும் பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் லாகூர் அருகே உள்ள பைசலாபாத்தை சேர்ந்தவர் முகமது ஷபீர். இவருடைய 16 வயது மகள், முகமது பஷரத் என்ற இளைஞனை காதலித்தாள். இதற்கு ஷபீர் கண்டனம் தெரிவித்தார். காதலனை பார்க்க செல்லக்கூடாது என தடை விதித்தார். ஒரு கட்டத்தில் மகளை அடிக்கவும் செய்தார்.
இதனால், ஆவேசமடைந்த அந்த பெண், தனது தந்தை காதலுக்கு தடை விதிப்பதால் அவரை தீர்த்துக்கட்ட துப்பாக்கி வாங்கி தருமாறு காதலனிடம் கேட்டாள்.இதையடுத்து முகமது பஷரத், துப்பாக்கியை வாங்கி கொடுக்க அதை பெற்றுக்கொண்ட அந்த பெண், ஷபீர் தூங்கி கொண்டிருந்த போது சுட்டுக்கொன்று விட்டாள்.
துப்பாக்கி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, ஷபீர் குண்டடி பட்டு இறந்து கிடந்தார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த பெண்ணையும், காதலன் பஷரத்தையும் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment