Monday, July 23, 2012

அஜீத்தின் புது இயக்குனர்


சமீபத்தில் வெளியான பில்லா-2படத்தையடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் பிசியாகியுள்ளார் தல அஜித். இப்படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் படம் எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரிடமும் இருந்து வருகிறது.

இந்நிலையில் விஷ்ணுவர்த்தன் படத்திற்கு பிறகு அஜீத் நடிக்கப் போகும் அடுத்த படத்தை சிவா இயக்குகிறார். இவர் ஏற்கெனவே கார்த்தி நடித்த சிறுத்தைபடத்தை இயக்கியவர். சிவாவின் சிறுத்தைபடத்தை பார்த்துவிட்டு அஜீத்தே நேரில் அழைத்து தனது கால்ஷீட்டை ஒதுக்கிக் கொடுத்துள்ளார்.

மங்காத்தா’, ‘பில்லா-2என தொடர்ச்சியாக வில்லனாக நடித்த அஜீத்தை இந்தப் படத்தின் மூலம் வேறொரு கோணத்தில் பார்க்கலாம் என இயக்குனர் சிவா உறுதிபட கூறுகிறார். ரசிகர்களும் அஜீத்தை வேறு கோணத்தில் பார்க்க ஆர்வமாக உள்ளனர்.


No comments:

Post a Comment