விஜய்யை வைத்து கவுதம் இயக்கும் புதிய படம் யோஹன் அத்தியாயம் ஒன்று. இதில் விஜய் ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசனை ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்திகள் பரவியது. பவன் கல்யாணுடன் ஸ்ருதி தெலுங்கில் நடித்த கப்பார்சிங் படம் வெற்றிகரமாக ஓடியது. எனவே ஸ்ருதியை கவுதம் யோஹன் படத்துக்கு தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து ஸ்ருதியிடம் கேட்டபோது மறுத்தார். யோஹன் படத்தில் விஜய்யுடன் நடிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. அப்படத்தில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என்றார். தன் கைவசம் நிறைய படங்கள் இருப்பதாகவும் கூறினார்.
கவுதம்மேனனும் ஸ்ருதியை தேர்வு செய்ததாக வெளியான செய்திகள் வெறும் வதந்திதான் என்றார். யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிப்பதற்காக ஸ்ருதியிடம் பேசவில்லை. கதாநாயகி தேர்வை இன்னும் தொடங்கவில்லை. இங்கிலாந்தில் பெரும் பகுதி காட்சிகள் படமாக உள்ளது. ஹாலிவுட் நடிகர்களும் இதில் நடிக்க உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment