Saturday, July 21, 2012

ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்: பாபா ராம்தேவ்


தான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிடப்  போவதில்லை என யோகாகுரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் பேசிய ராம்தேவ், 'நான் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டேன். ஆனால் அரசியலில் ஏற்படும் தவறுகளுக்கு எதிராக நான் எப்போதும் போராடுவேன்’ என்றார்.
 
'அரசியலில் சாணக்கியராக செயல்படுவீர்களா?’ என நிருபர்கள் கேட்டதற்கு, 'இதற்கு நான் ‘ஆமாம்’ என பதிலளித்தால் புதிய பிரச்சினை துவங்கும்’ எனவும் ராம்தேவ் பதிலளித்தார்.
 
கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய பொறுப்பை ஏற்கப் போவதாக அறிவித்துள்ள ராகுல் காந்தியை வாழ்த்துவதாகவும் ராம்தேவ் கூறினார். ராகுல் பற்றி பேசிய ராம்தேவ், 'வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும், வெள்நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணத்தை மீட்கவும் ராகுல் முயற்சிக்க வேண்டும்’ என்றார். .


No comments:

Post a Comment