அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான டென்வரில் உள்ள சினிமா தியேடடருக்குள் புகுந்த முகமூடி மனிதன் திடீரென துப்பாக்கியில் சுட்டுள்ளான்.
இதில் படம் பார்த்துக்கொண்டிருந்த 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 50 பேர் காயமடைந்திருப்பதாக உள்ளூர் வானொலி நிலையம் தெரிவித்தது. இந்த சம்பவத்தில் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என அஞ்சப்படுவதால் அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகள் மருத்துவ உதவிக்கு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டன.
தியேட்டர் வளாகத்தில் கண்ணீர் புகை அல்லது வெடிக்கும் குண்டு போன்ற பொருள் இருந்தததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.
கிறிஸ்டியன் பாலே மற்றும் அன்னே ஹேத்வே ஆகியோர் நடித்த அதிரடி திரைப்படமான ‘தி டார்க் நைட் ரைசஸ்’ நேற்று திரைக்கு வந்தது. முதல் நாள் என்பதால் ஏராளமானோர் படத்தைக் காண வந்திருந்தனர். இதனால் கூட்ட நெரிசலைப் பயன்படுத்திய அந்த முகமூடி ஆசாமி துப்பாக்கியை மறைத்து கொண்டு வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் கூறுகையில், ‘படவென சத்தம் கேட்டதால் பட்டாசு வெடிப்பதாக நினைத்தேன். பின்னர் துப்பாக்கி குண்டுகள் பறந்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்’ என்றார்.
இச்சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது..

No comments:
Post a Comment