என் படத்தில் தொப்புள், முத்தக்காட்சி இருக்காது. அதுபோன்ற காட்சியை எப்போதும் படமாக்க மாட்டேன் என்றார் இயக்குனர் மிஷ்கின். இது பற்றி அவர் கூறியதாவது: என் படங்களில் என்றைக்கும் தொப்புள், முத்தக்காட்சி இருக்காது. அதுபோன்ற காட்சிகளை ஒருநாளும் படமாக்க மாட்டேன். ஒவ்வொரு சிறுகதையும் ஒன்றுக்கொன்று வேறுபடுவதுபோல், என் படங்களும் ஒன்றுபோல் இன்னொன்று இருக்காது. சிறுவயது முதலே ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் நிறைய படிப்பேன். அந்த பழக்கம் இன்றைக்கும் இருக்கிறது. அதில் வரும் கதாபாத்திரங்கள்போல் ஒரு கதை உருவாக்கினேன். அதுதான் முகமூடி. சூப்பர்மேன் கதையான இதில் ஜீவா ஹீரோ. வில்லன் நரேன். ஒரு நாளைக்கு 2 மணிநேரம் மட்டுமே தூங்கிவிட்டு மற்ற நேரமெல்லாம் இந்த படத்துக்காக பணியாற்றினேன். 11 கிலோ எடையுள்ள உடையை அணிந்துகொண்டு தினமும் 8 மணிநேரம் ஓய்வில்லாமல் 91 நாட்கள் ஜீவா நடித்திருக்கிறார். இப்படம் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். இன்னும் 8 வருடத்துக்கு என்னிடம் கதைகள் இருக்கிறது. இதில் எதை எடுப்பது என்பதுபற்றி விரைவில் முடிவு செய்வேன். பிறமொழி படம் இயக்கும் எண்ணம் இப்போது இல்லை. எனக்கு அதிக ஆசை கிடையாது. சாப்பிட, தூங்க, காருக்கு பெட்ரோல்போட காசு இருந்தால்போதும் தொடர்ந்து கடுமையாக உழைப்பேன். பேங்க் பேலன்ஸ்கூட எனக்கு தேவையில்லை. இவ்வாறு மிஷ்கின் கூறினார்.
No comments:
Post a Comment