ரஜினியின் எந்தப்
படமும் லிங்கா அளவுக்கு பிரச்சனையை சந்தித்திருக்காது. படப்பிடிப்பு தொடங்கிய போதே
கன்னட அமைப்புகள் கொடி பிடித்தன. பிறகு அணைக்கட்டுப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தியதை
எதிர்த்து போராட்டம்.
அனைத்தையும் கடந்து
படத்தை முடித்தால், லிங்கா என்னுடைய கதை என்று மதுரையில் வழக்கு. அதில் தப்பிப்பிழைத்து
அக்கடா என்று உட்கார்ந்தால் சக்திவேல் என்பவர், லிங்கா என்னேட கதை என்று அதே பழைய சங்கை
எடுத்து ஊதியிருக்கிறார்.
சக்திவேலின் மனுவை
விசாரித்த நீதிபதி, படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்
உள்ளிட்டவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை
ஒன்பதாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
லிங்காவை 12 -ஆம்
தேதி வெளியிட உள்ளனர். வழக்கு விசாரணை 9 -ஆம் தேதி. விசாரணை சாதகமாக முடிந்து படம்
வெளியாக வாய்ப்புள்ளதா?
லிங்கா மொத்த படமும்
முடிந்த பிறகே சக்திவேல் தன்னுடைய கதையை முறைப்படி பதிவு செய்திருக்கிறார். அதனால்
தீர்ப்பு லிங்காவுக்கு சாதகமாக இருக்கும், படம் கண்டிப்பாக 12 -ஆம் தேதி வெளியாகும்
என நம்பிக்கையுடன் உள்ளனர்.
நம்பிக்கைதானே
வாழ்க்கை.

No comments:
Post a Comment