Friday, December 19, 2014

த்ரிஷா12 குவியுது வாழ்த்து

சினிமாவுக்கு த்ரிஷா வந்து, 12 வருடங்கள் ஆனதையொட்டி சீனியர் நடிகைகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சினிமாவில் ஹீரோயின்களுக்கான ஆயுள் மிகக் குறைவு. குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் தாக்குப்பிடிப்பதே அதிகம். ஆனால் த்ரிஷா, 12 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்துவருகிறார். இது அவரது சாதனை என்கிறார்கள்.
ஹீரோயின் ஆவதற்கு முன் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், 2002-ல் வெளியான ‘மவுனம் பேசியதே’ மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் த்ரிஷா. பிறகு ‘சாமி’, ‘லேசா லேசா’, ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆறு’, ‘கிரீடம்’, ‘குருவி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘மங்காத்தா’ என பல்வேறு படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக திகழ்கிறார். 

இப்போது தமிழில் அஜீத் ஜோடியாக, ‘என்னை அறிந்தால்’, ஜெயம்ரவி ஜோடியாக ‘பூலோகம்’ படங்களில் நடித்துள்ளார். 12 வருடங்களாக தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷாவுக்கு நடிகைகள் ராதிகா, குஷ்பு, ரம்யா கிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ட்விட்டர் இணையதளத்தில் ஏராளமான ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment