ஸ்பெயினில் நடக்கும்
லா லிகா கால்பந்து தொடரில், ரியல் மாட்ரிட் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 23வது ஹாட்ரிக்
கோல் அடித்து சாதனை படைத்தார்.
செல்டா விகோ அணியுடன்
நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில்
அபாரமாக வென்றது.
அந்த அணியின் நட்சத்திர
வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3 கோல் போட்டு ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன், லா லிகா தொடரில்
அதிக ஹாட்ரிக் பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
முன்னதாக, தெல்மோ
ஸரா, ஆல்ப்ரெடோ டி ஸ்டெபானோ தலா 22 ஹாட்ரிக் கோல் அடித்துள்ளனர். அவர்களின் சாதனையை
முறியடித்துள்ள ரொனால்டோ தனது 179வது லா லிகா ஆட்டத்தில் 200 கோல் என்ற சாதனை மைல்
கல்லையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment