சீனாவில்
உள்ள அரசு வானொலியில் 1963–ம்
ஆண்டிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.
இதற்காக செயல்படுகிற வானொலி நிலையத்தின் தமிழ்த்துறையில்
பணியாற்றுகிற ஊழியர்களில் பெரும்பாலோர் தமிழ் பேசும் சீனர்கள்.
குறிப்பாக, இதில் பணியாற்றி வருகிற
லியாவோ லியாங் (வயது 25) என்ற
பெண் தொகுப்பாளர், சரளமாக தமிழ் பேசி
நிகழ்ச்சியை நடத்தும் பாங்கு அனைவரையும் அவர்
கவருவதாக உள்ளது.
அவர் அந்த வானொலியில் தமிழ்
நிகழ்ச்சிகளை பூங்கோதை என்ற பெயரில் தொகுத்து
வழங்குகிறார்.
சீன கலாசாரத்துக்கும், தமிழ் கலாசாரத்துக்கும் இடையே
அவர் பாலமாக திகழ்கிறார். இது
தொடர்பாக அவர் செய்தி நிறுவனம்
ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘ மிகுந்த
ஆர்வத்துடன்தான் நான் தமிழ் மொழியை
கற்றேன். கடினமான இலக்கணங்களுடன் கூடிய
மொழி இது என்பதை நான்
அறிவேன். ஆனாலும் கற்க விரும்பினேன்.
எனவே ஒரு பல்கலைக்கழகத்தில் பதிவு
செய்து கொண்டேன். அங்குள்ள இந்தியாவை சேர்ந்த தமிழாசிரியர், எனக்கு
தமிழில் பெயர் சூட்டினார். அதிலிருந்துதான்
என் தமிழ்ப்பயணம் தொடங்கியது’’ என்று கூறினார்.

No comments:
Post a Comment