Tuesday, December 2, 2014

கமல் தான் என் அப்பா :நடிகை நிவேதா பரபரப்பு பேட்டி

ஷூட்டிங் இருந்தால் நடிப்பு, இல்லையென்றால் படிப்பு என சிங்கிள் ட்ராக்கில் டபுள் ரயில் ஓட்டுகிறார் நிவேதா தாமஸ். இப்போது, ‘பாபநாசத்தில் கமலின் மகளாக நடித்து வரும் பொண்ணுக்குவாட்ஸ் அப்பினால் ‘‘காலேஜ்ல இருக்கேன்.. கேட்ச் அட் ஈவினிங்’’ என அதே ஸ்பீடில் எகிறி வந்தது பதில். பனி தூவும் மாலைப் பொழுதில், இனித்தது நிவேதாவின் பேச்சு.

‘‘சென்னையிலதான் ஆர்க்கிடெக்சர் படிக்கறேன். படிப்பும், நடிப்புமா இருக்கறது கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, எனக்கு ரெண்டுமே முக்கியம். அதனால ஈஸியா மேனேஜ் பண்ணிக்கக் கத்துக்கிட்டேன். ஷூட்டிங் முடிஞ்சு ஹோட்டல் வந்ததும், என் க்ளாஸ்மேட்ஸுக்கு போன் போட்டு, ‘இன்னிக்கு என்ன நடத்தினாங்க... அசைன்மென்ட்ஸ் என்ன? ப்ராஜெக்ட் என்னன்னு சின்ஸியரா விசாரிச்சுக்குவேன். விளையாட்டுல கூட நான் ஃபர்ஸ்ட். ஸ்கூல்ல படிக்கிறப்ப பேட்மின்டன்ல மாவட்ட அளவில் கோல்டு மெடல் வாங்கியிருக்கேன்!’’

‘‘சினிமாவில் எப்படி என்ட்ரி..?’’

‘‘பூர்வீகம் கேரளான்னாலும் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமா நான் நடிச்சவெறுதே ஒரு பாரியாபடத்துக்காக கேரளா ஸ்டேட் அவார்டு கிடைச்சிருக்கு. சமுத்திரக்கனிஅரசிசீரியல் டைரக்ட் பண்றப்ப, எனக்கு அதுல நடிக்கிறதுக்கு ஒரு சான்ஸ் கிடைச்சது. அவர்தான்போராளியில என்னையும் ஒரு ஹீரோயினா ஆக்கினார். ‘நவீன சரஸ்வதி சபதம் ஹீரோயின். அப்புறம்ஜில்லாவில் மோகன்லால் சார், விஜய் அண்ணா கூட நடிச்சேன்!’’

‘‘பெரிய ஸ்டார் படங்களா பண்றீங்களே..?’’

‘‘எல்லாம் தானா அமைஞ்சதுதான். மலையாளத்தில்த்ரிஷ்யம் லால் சாரோட மகள் கேரக்டர்ல நான் நடிக்க வேண்டியதா இருந்தது. அப்போ என்னால பண்ண முடியலை. அதுக்கப்புறம் அது தெலுங்கில் ரீமேக் ஆனப்பவும், என்னை நடிக்க கேட்டாங்க. அப்பவும் பண்ண முடியாமப் போச்சு. தமிழ்ல கமல் சார் பொண்ணா நடிக்கக் கிடைச்ச சான்ஸ் எனக்கு கிஃப்ட்!’’

‘‘கமல் - கௌதமி...?’’

‘‘என் அப்பா, அம்மாவா கமல் சார், கௌதமி மேம் நடிக்கிறாங்க. நிஜமாவே அவங்களோட பொண்ணா என்னை ட்ரீட் பண்றாங்க. என்னோட கேரக்டர் பேர் செல்வி. அதைச் சொல்லித்தான் கூப்பிடுறாங்க. கமல் சாரோட வொர்க், டெடிகேஷன் எல்லாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். இப்போ பக்கத்தில் இருந்து பார்க்கறேன்;

 பிரமிப்பா இருக்கு. நான் டைமுக்கு சாப்பிட்டேனான்னு கௌதமி மேம் அக்கறையா விசாரிப்பாங்க. குற்றாலம், கேரளான்னு ஷூட்டிங் முடிஞ்சி ருக்கு. ஒரு லெஜண்ட் கூட நடிக்கறேன்னு பெருமையா இருக்கு. ப்ரேக்ல எல்லாம், எனக்குத் தெரிஞ்ச மலையாள சூப்பர் ஹிட் பாட்டுகளை அரைகுறை வரியில கொஞ்சம் ஹம் பண்ணுவேன். ஆனா, கமல் சார் அழகா ஃபுல் சாங்கையும் அதேமாதிரி பாடி அசத்துவார்...’’

‘‘பைக் ரேஸ்ல உங்களுக்கு ஆர்வமாமே?’’

‘‘ஆமாம். ரேஸ் பைக்னா அவ்வளவு இஷ்டம். ஆனா, ரேஸ் பைக் லைசென்ஸ் வாங்கலை. புல்லட் நல்லா ஓட்டுவேன். ஜெய் என்னோட ஃப்ரெண்ட் ஆனதுக்கு காரணமே, அவர் ஒரு பைக் ரேஸர்ங்கறதால தான். பைக் ஓட்டுறது பிடிக்கும்னாலும் ஊர் சுத்துறதுக்கு பிடிக்காது!’’

‘‘ஹீரோயினா நடிச்சிட்டு, கிடைச்ச கேரக்டர்களை பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே..?’’


‘‘நல்ல விஷயம்தானே! நான் ஒரு இமேஜ்ல சிக்க விரும்பலை. எல்லா கேரக்டர்களும் செய்யறப்பதான் ஆக்டிங் கத்துக்க முடியும். ‘நவீன சரஸ்வதி சபதம்சரியா போகலை, தமிழ்ல தொடர்ந்து ஹீரோயினா நடிக்க முடியலைன்னு வருத்தமில்லை. தெலுங்கில் நவீன் சந்திரா படத்தில் ஹீரோயினா பண்றேன். நான் ஓரளவு நல்லா பாடுவேன். சினிமாவில் பாட வாய்ப்பு கிடைச்சா, பாடவும் செய்வேன். பத்து வருஷம் கழிச்சு, என்னை நானே திரும்பிப் பார்த்தால், நல்ல படங்கள் நிறைய பண்ணின திருப்தியாவது கிடைக்கணும்!No comments:

Post a Comment