விஜய் நடித்த கில்லி, போக்கிரி
போன்ற படங்கள் ஹிட்டானது. இப்படங்கள்
தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘ஒகடு', ‘போக்கிரி'
படங்களின் ரீமேக். சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி
இயக்கிய ‘கத்தி' படத்தில் நடித்தார்
விஜய். இப்படம் ஹிட் ஆனது.
தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்வதுதொடர்பாக ஆலோசனை
நடந்துவந்தது. பவன் கல்யாண் இப்படத்தை
பார்த்துவிட்டு நடிக்க மறுத்துவிட்டார். தற்போது
மகேஷ்பாபுவும் நடிக்க மறுத்திருக்கிறார்.இதுபற்றி
மகேஷ்பாபு கூறும்போது,‘எனக்கு கத்தி படம்
உண்மையிலேயே பிடித்திருந்தது.
சமீபத்தில்
விஜய் நடித்து வெளியான படங்களில்
அவருக்கு மிகச் சிறந்த படமாக
இது அமைந்திருந்தது. ஆனால் இதன் ரீமேக்கில்
நான் நடிக்கவில்லை. வழக்கமாக நான் ரீமேக் படங்களில்
நடிப்பதில்லை என்ற பாலிசியுடன் இருக்கிறேன்'
என்றார்.
இதையடுத்து
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேறு ஹீரோவை
தயாரிப்பாளர்கள் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment