காதலர் தினம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கியவர் கதிர். கடந்த 2002ம் ஆண்டு காதல் வைரஸ் படம் இயக்கியபிறகு மாயமானார்.
12 வருடமாக காணாமல்போயிருந்த கதிர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தேடியபோது சான்டல்வுட் பக்கமிருந்து குரல் கேட்டது.
அவர் கூறியது:
சர்வதேச ரீதியில் ஒரு படம் இயக்குவதற்காக எனது நேரத்தை இத்தனை நாள் செலவழித்து வந்தேன். தேச தந்தை காந்தியின் வரலாற்றை படமாக்குவதற்கான பணியில் கடந்த 6 வருடமாக மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன்.
இதற்காக காந்தி பயணித்த இடங்களுக்கெல்லாம் நேரில் சென்று தகவல் திரட்டினேன். இது சவாலான படம். அவரது வாழ்க்கை கதையாக இது உருவாகிறது.
மக்களை கவர்ந்தவர்களைப் பற்றி படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கு தேச தந்தை காந்தியைவிட இன்னொருவர் யாரையும் என்னால் எண்ணிப்பார்க்க முடியவில்லை.
இதற்கிடையில் கன்னடத்தில் புதிய படம் இயக்குகிறேன். காதல் சம்பந்தமில்லாத படமாக இது உருவாகிறது.
இதில் பணியாற்றும் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே புதுமுகங்கள்தான் என்றார்.

No comments:
Post a Comment