இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி அங்கு சென்றது முதல் வீரர்கள் சரியான சைவ உணவு வகைகள் கிடைக்காமல் சிரமத்தை சந்தித்து வந்து இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் மரணம் காரணமாக வீரர்கள் இந்த பிரச்சினையை முதலில் கிளப்பவில்லை. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய சமையல்காரர் தயாரித்த உணவுகள் வழங்கப்பட்டதால் எந்த பிரச்சினையும் எழவில்லை. ஆனால் பிரிஸ்பேனில் நடந்த 2–வது டெஸ்ட் போட்டியில் சைவ உணவுகள் இல்லாததால் வீரர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள்.
குறிப்பாக 3–வது நாள் மதிய உணவு இடைவேளையில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, சுரேஷ்ரெய்னா ஆகியோர் மைதானத்தில் அளிக்கப்பட்ட உணவை புறக்கணித்து விட்டு கோபத்துடன் வெளியில் போய் தேவையான சைவ உணவுகளை வாங்கி வந்தனர். ஆனால் அந்த உணவை மைதானத்துக்குள் கொண்டு வர அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் இருவரும் மைதானத்துக்கு வெளியில் வைத்து சாப்பிட்டு விட்டு உள்ளே வந்தனர். இந்திய அணியின் டைரக்டர் ரவிசாஸ்திரி உள்பட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகளும் சைவ உணவு கிடைக்காமல் வெளியே சென்று சாப்பிட வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். இது குறித்து இந்திய அணி நிர்வாகம் சார்பில் புகார் செய்தும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கண்டு கொள்ளவில்லை.
இந்திய அணி தனது சுற்றுப்பயணம் புறப்படும் முன்பே தங்களுக்கு தேவையாக உணவு வகைகள் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய பட்டியல் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment