மு.க.அழகிரியின் ஆதரவாளரான நடிகர் நெப்போலியன், தே.மு.தி.க. தலைவரான விஜயகாந்தை நேற்று திடீரென சந்தித்து பேசினார்.
மு.க.அழகிரி ஆதரவாளர்கள்
தி.மு.க. தென் மண்டல அமைப்பு செயலாளராகவும், முன்னாள் மத்திய மந்திரியுமாக இருந்த மு.க.அழகிரி, கட்சியின் தலைமை பற்றி அதிருப்தியான கருத்துக்களை தெரிவித்ததால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி தனது பிறந்தநாளை மதுரையில் மு.க.அழகிரி கொண்டாடினார்.
தி.மு.க.வில் இருந்து அவர் நீக்கப்பட்டிருந்ததால், கட்சி நிர்வாகிகள் யாரும் அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்போது எம்.பி.க்களாக இருந்த நடிகர் நெப்போலியன், நடிகர் ரித்தீஷ் மற்றும் கே.பி.ராமலிங்கம் ஆகியோர், பிறந்த நாள் விழாவில் பங்கேற்று மு.க.அழகிரிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால், மு.க.அழகிரியின் ஆதரவாளர்களாக அவர்கள் செயல்பட்டு வந்தது ஊர்ஜிதம் ஆனது.
விஜயகாந்துடன் சந்திப்பு
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்ற நெப்போலியன் அங்கேயே வசித்து வந்தார். நடிகர் ரித்தீஷ் சமீபத்தில் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட்டார். இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திரும்பிய நடிகர் நெப்போலியன் நேற்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தே.மு.தி.க. பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எம்.எல்.ஏ. ஆகியோரும், நெப்போலியனுடன் வந்த 10 பேரும் உடன் இருந்தனர்.
காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது, விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நெப்போலியன், அவரது உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தமிழக அரசியல் நிலைமை குறித்தும் பேசியதாக தெரிகிறது. மு.க.அழகிரியின் ஆதரவாளரான நெப்போலியன், விஜயகாந்தை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சந்திப்பு ஏன்?
இதுகுறித்து, நடிகர் நெப்போலியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நான் அமெரிக்காவில் தங்கியிருந்தபோது, விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்து கேள்வி பட்டு பதறிப்போய்விட்டேன். கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சென்னை வந்தேன். அவரை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக அவரை சந்தித்தேன். நடிகர் சங்க தலைவராக 6 ஆண்டுகள் அவர் இருந்தபோது துணை தலைவராக நான் பணியாற்றியுள்ளேன். அவரிடம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment