நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் இருந்து விலகினார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைகிறார்.
நடிகர் நெப்போலியன்
தி.மு.க.வில் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார் நடிகர் நெப்போலியன். இவர் எம்.எல்.ஏ. ஆகவும், எம்.பி. ஆகவும், மத்திய மந்திரியாகவும் தி.மு.க.வில் இருந்து பணியாற்றி இருக்கிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. சார்பில் போட்டியிட ‘சீட்’ கேட்டு, நடிகர் நெப்போலியன் விண்ணப்பிக்கவில்லை. அதன் பின்னர் தி.மு.க. பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று தி.மு.க.வில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி முகவரியிட்டு கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு கொடுத்து அனுப்பினார்.
விலகல் கடிதம்
நெப்போலியன் தனது விலகல் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
பெருமதிப்புக்குரிய தலைவர்-பொதுச்செயலாளருக்கு வணக்கம், எனது 16 வயதில் இருந்து கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ந்து நான் பணியாற்றிய, என்னை உருவாக்கிய தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன்.
இதுநாள் வரை எனக்கு உயர்வளித்து, ஆதரவளித்து, அன்பு பாராட்டிய இயக்கத்தின் தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும், பொருளாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும், என்னிடம் அன்பு பாராட்டிய தி.மு.க.தொண்டர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க.வில் இணைகிறார்
தி.மு.க.வில் இருந்து விலகிய நடிகர் நெப்போலியன், இன்று பா.ஜ.க.தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைகிறார்.

No comments:
Post a Comment