கவுதம்
மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும்
புதிய படமான என்னை அறிந்தால்
டீசர் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. ஹாரிஸ்
ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம் வரும்
பொங்கலுக்கு வெளியாகிறது.
படத்தை
வரவேற்க அஜீத் ரசிகர்கள் இப்போதே
மும்முரமாக உள்ளனர். மாவட்டந்தோறும் படத்துக்கு பேனர்கள், கட் அவுட்டுகளை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களை
வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.
இந்த வாரத்தில் டீசர் வெளியாகவிருக்கிறது. டிசம்பர்
இரண்டாம் வாரத்தில் படத்தின் இசையை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
டிசம்பர் 5-ம் தேதி இந்தப்
படத்தை சென்சாருக்கு அனுப்புகிறார்கள்.
அஜீத் படத்துன் விக்ரம் நடித்த ஐ
படமும் ரிலீஸ் ஆகும் என
முதலில் தகவல் வெளியானது. இப்போது
மோதலைத் தவிர்க்க ஐ படத்தை ஒரு
வாரத்திற்கு முன்னதாகவே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment