சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாட மலேசியாவில் வேலை
பார்க்கும் என்ஜினியர் ரவி சங்கர் என்பவர்
லீவ் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வரும் 12ம் தேதி
கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ரஜினி,
சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்டோர்
நடித்துள்ள லிங்கா படம் பிரமாண்டமாக
ரிலீஸ் ஆகிறது.
12ம் தேதி வெள்ளிக்கிழமை என்பதால்
பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல்
வேலைக்கு செல்பவர்கள் வரை உள்ள ரஜினி
ரசிகர்கள் பலர் அன்றைய தினம்
லீவ் போட திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே
லீவ் லெட்டரில் பலமுறை இறந்துவிட்ட பாட்டி
இறந்துவிட்டார் என்று சொல்லலாமா, தாத்தா
இறந்துவிட்டார் என்று சொல்லலாமா என்று
பலர் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில்
மலேசியாவின் செலங்கோர் மாநிலத்தில் உள்ள பெருன்டிங் ஓசிஎஸ்
நிறுவனத்தில் பணிபுரியும் என்ஜினியரான ரவி சங்கர் என்பவர்
வித்தியாசமான முறையில் லீவ் கேட்டுள்ளார்.
அதாவது
அவர் ரஜினிகாந்த் பிறந்தநாளை கொண்டாடப் போகிறேன் என்று கூறியே லீவ்
கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவரது விண்ணப்பம் இணையதளத்தில்
தீயாக பரவி வருகிறது. 12ம்
தேதி லீவ் வேண்டும் என்று
கூறி அவர் கடந்த 1ம்
தேதியே விண்ணப்பித்துவிட்டார்.
இதுதொடர்பாக
ஒரு விடுமுறை விண்ணப்ப புகைப்படம் இணையதளங்களில் உலா வந்து கொண்டுள்ளது.

No comments:
Post a Comment