திருமணமானபின்
சினிமாவிலிருந்து விலகியிருந்த பூவே உனக்காக சங்கீதா
மீண்டும் நடிக்க வந்தது பற்றி
ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். மலையாளத்தில்
சீனிவாசன் நடிப்பில் தயாராகும் நகரவருதி நடுவில் ஞான் என்ற
படத்தில் சீனிவாசனின் மனைவியாக சங்கீதா நடிக்கிறார்.
1998 -இல்
வெளியான சிந்தாவிஷ்டயாய சியாமளா படத்தில் சீனிவாசனின்
மனைவியாக நடித்து மாநில விருதையும்
பெற்றார் சங்கீதா. கிட்டத்தட்ட 16 வருடங்களுக்குப் பிறகு, 1998 -இல் பார்த்த அதே
இளமையுடன் மீண்டும் நடிக்க வந்திருக்கும் சங்கீதாவைப்
பார்த்து மலையாளிகள் மிரண்டு போயுள்ளனர்.
16 வருடங்களாக
அதே இளமையை பாதுகாப்பது என்ன
அவ்வளவு சாதாரணமா?
ஷிபு பாலன் இயக்கும் இந்தப்
படம் வெளிவந்தால் மோகன்லால், மம்முட்டி ஜோடியாக மலையாளத்தில் இன்னொரு ரவுண்ட் சங்கீதா
வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

No comments:
Post a Comment