காவியத்தலைவன்
யுஎஸ்ஸில் முதல் மூன்று தினங்களில்
35 திரையிடல்களில் 67,692 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது.
ரூபாயில் ஏறக்குறைய 42.04 லட்சங்கள். உண்மையிலேயே மிக நல்ல வசூல்.
யுகே மற்றும் அயர்லாந்தில் அதே
மூன்று தினங்களில் ஐந்து திரையிடல்களில் 8,672 பவுண்ட்களை வசூலித்துள்ளது.
திரையிடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் வசூலும்
அதிகமிருந்திருக்கும். நமது ரூபாயில் 8.41 லட்சங்கள்.
மலேசியா
தமிழ் சினிமாக்களின் முக்கியமான சந்தை. இங்கு முதல்
மூன்று தினங்களில் 4 திரையிடல்களில் 3.96 லட்சங்களை காவியத்தலைவன் வசூலித்துள்ளது.

No comments:
Post a Comment