அந்நாட்டுப் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை, ’எக்சாக்டோ’ என்ற திட்டத்தின்படி ஏற்கனவே நேரடியான துப்பாக்கி சுடும் சோதனைகளை நடத்தியுள்ளது. இது போர்வீரர்களுக்கு இலக்கு நகரும் போதும் அதை தாக்கும் உதவியை செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
கடும் காற்று மற்றும் புழுதிக் காற்று வீசும் போது தற்போது உள்ள புல்லட்கள் மூலம் இலக்கை நோக்கி குறி வைத்து தாக்க போர்வீரர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் முகமை தெரிவித்தது.
இதையடுத்து புதிய திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி இந்த .50 கேலிபர் கொண்ட இந்த ’புத்திசாலி’ புல்லட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் மூலம் புழுதிக்காற்று வீசும் போது கூட வீரர்களால் துல்லியமாக இலக்கை நோக்கி சுடமுடியும். இதற்கான சோதனை முயற்சியில் புல்லட்டானது 1.5 மைல் தூரத்திற்கு நிகரான இலக்கை மூன்றே விநாடிகளில் துல்லியமாக சென்று தாக்கியது.
துப்பாக்கியிலிருந்து புல்லட் செலுத்தப்பட்டவுடன், அதில் இணைக்கப்பட்டுள்ள ஸ்நைபரானது இலக்கை நோக்கி லேசர் வெளிச்சத்தை பாய்ச்சும். இலக்கு நகரும்போது லேசரும் அதன் கூடவே நகரும். இந்த நேரத்தில் காற்றில் பாய்ந்து சென்று கொண்டிருக்கும் புல்லட்டில் இருக்கும் ஆப்டிகல் சென்சாரானது லேசர் வெளிச்சம் ஏங்கே செல்கிறது என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு தனது பாதையை மாற்றி இலக்கை தாக்குகிறது. இந்த புதிய முறையால் இலக்கு தவறாமல் சுட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாமல் இலக்கை நோக்கி சுடும்போது இலக்கு தவறினால் வீரர்களின் இருப்பிடம் பற்றி எதிராளிகளுக்கு தெரிந்து விடும். இதனால் வீரர்களின் பாதுகாப்பில் கேள்விக்குறி எழுந்தது. இனி தங்கள் இருப்பிடம் எதிரிகளுக்கு தெரிந்து விடுமோ என்று எவ்வித பயமும் இல்லாமல் வீரர்கள், எதிரிகளின் இலக்கை துணிச்சலாக தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment