குஜராத், கேரளாவில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மதம் மாறிய விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் இன்று கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உத்தரப் பிரதேசம் ஆக்ராவில் 57 முஸ்லிம் குடும்பங்கள், பஜ்ரங் தள் அமைப்பினர் ஏற்பாடு செய்த யாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமீபத்தில் இந்துவாக மதமாறிய சம்பவம் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்பிரச்னையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி பதில் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கினர். சட்டம் ஒழுங்கு மாநில அரசு சம்பந்தப்பட்டது என்றும், இதில் மத்திய அரசு தலையிட முடியாது என்று ஆளும் கட்சி பதிலளித்தது. ஆனால், சர்ச்சை நீடித்தது.
இதே போன்ற மதமாற்ற நிகழ்ச்சி உத்தரப் பிரதேசத்தின் அலிகர் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய விஷயங்களில் பா.ஜ. எம்.பிக்கள் யாரும் வரம்பு மீறி ஈடுபடக்கூடாது என பிரதமர் மோடி விடுத்த எச்சரிக்கையை அடுத்து இந்நிகழ்ச்சி ஒத்தி போடப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வல்சாத் பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அமைப்பினர் நேற்று முன்தினம் மதமாற்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ‘கர் வாபஸி’ (வீட்டுக்கு திரும்புதல்) இங்கு நடத்தப்பட்ட யாக நிகழ்ச்சியில், பழங்குடியின கிறிஸ்தவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டு மீண்டும் இந்துவாக மாறினர். இது குறித்து கருத்து தெரிவித்த வல்சாத் பகுதி வி.எச்.பி தலைவர் அஜித் சோலங்கி, ‘‘அவர்கள் தானாக முன்வந்து மதம் மாறியுள்ளனர், வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படவில்லை’’ என்றார்.
குஜராத் அரசு செய்தி தொடர்பாளர் நிதின் படேல் கூறுகையில், ‘‘இது மக்கள் தானாக முன்வந்து நடத்தும் நிகழ்ச்சி. இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை. மக்கள்வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்யப்படுகின்றனர் என எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. மக்கள் எந்த மதத்தையும் பின்பற்ற உரிமை உள்ளது’’ என்றார்.
இதேபோல் கேரள மாநிலம் ஆழப்புலாவில் உள்ள கனிச்சானலூர் கோயிலில் வி.எச்பி நேற்று ஏற்பாடு செய்த மதமாற்ற நிகழ்ச்சியில், தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவ இனத்தைச் சேர்ந்த 8 குடும்பங்களில் இருந்து 30 பேர் நேற்று மீண்டும் இந்துக்களாக மாறினர். இது குறித்து கருத்து தெரிவித்த வி.எச்.பி. ஆழப்புலா மாவட்ட தலைவர் பிரதாப், ‘‘கிறிஸ்தவர்களாக மத மாறியவர்கள், மீண்டும் இந்துக்களாக விருப்பம் தெரிவித்தனர்.
அவர்களின் முன்னோர் சில ஆண்டுகளுக்கு முன் இந்துவிலிருந்து கிறிஸ்தவர்களாக மாறியவர்கள். இதேபோல் இன்னும் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்துவாக மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சியை வி.எச்.பி ஏற்பாடு செய்யும்’’ என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ராஜா கூறுகையில், கட்டாயமாக மாற்றப்படும் எந்த மத மாற்றமும் சட்டப்படி தவறுதான். அது தடுக்கப்பட வேண்டும். மீண்டும் மதம் மாற்றம் நிகழ்ச்சியை பா.ஜ. அரங்கேற்றி வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது. இந்து அமைப்பினரின் இந்த மதமாற்ற செயலால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் பல கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவங்களை நாடாளுமன்றத்தில் இன்று கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மதமாற்ற தடை சட்டத்தை ஆதரிக்க வேண்டும்
மதமாற்றம் குறித்து பா.ஜ தலைவர் அமித் ஷா அளித்த பேட்டியில், ‘‘கட்டாய மதமாற்றத்தை பா.ஜ எப்போதும் எதிர்க்கிறது. மதச்சார்ப்பற்ற கட்சிகள் தங்கள் கொள்கையில் உண்மையாக இருந்தால், கட்டாய மதமாற்று தடை சட்டத்தை ஆதரிக்க வேண்டும்’’ என்றார்.
ஏற்கனவே இந்துவாக மாறும் கிறிஸ்தவர்களுக்கு இரண்டு லஞ்சம் ரூபாயும் இந்துவாக மாறும் முஸ்லீம்களுக்கு 5 லட்ச ரூபாவும் வழங்கப்படும் என்று பகிரகமாக விளம்பரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது! உலகத்திலேயே ஒரு மதம் காசுக்கு விற்கப்படுவது(பகிரங்கமாக) இதுவே முதல் முறை! இதிலாவது முதல்முறையாக இந்தியாவை கொண்டு வந்தாங்களே அதற்காக இந்தியாவை காப்பத்த வந்த மோடிக்கும் அவரது சகாக்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வோம் !( வேறு வழி).

No comments:
Post a Comment