Friday, December 19, 2014

நா.முத்துக்குமார் வேல்முருகனுக்கு டாக்டர் பட்டம்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார், பாடகர் வேல்முருகன் ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர்.தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுக்கும் மேலாக பாடல் எழுதி வருபவர் நா.முத்துக்குமார்.  

சமீபத்தில் தேசிய விருது பெற்றார். இவருக்கு அமெரிக்க உலகத்தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துள்ளது. இதற்கான விழா சென்னை தி.நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராய அரங்கில் நடந்தது. பல்கலைக்கழகத் தலைவர் செல்வின்குமார் பட்டத்தை வழங்கினார்.

தமிழில் சினிமாவில், ‘ஒத்த சொல்லால’, ‘ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா’, ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ உட்பட ஏராளமான பாடல்களை பாடியிருப்பவர் கிராமிய பாடல் கலைஞர் வேல்முருகன். இவர், கிராமிய பாடல்கள் மூலம் சமுதாய கருத்துக்களைச் சொல்வதற்காக, அமெரிக்காவில் உள்ள உலக அமைதிக்கான அகாடமி, டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. 

No comments:

Post a Comment