விஜய்யின்
60 -வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார் என்று
காட்டுத்தீயாக செய்தி பரவிய நிலையில்
இல்லை என்று மறுத்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.
அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் விஜய்யின் 60 -வது படத்தை அவர்
இயக்குவது உறுதி செய்யப்பட்டிருந்தது. பிறகு அது
திடீரென்று மாற்றப்பட்டது. அது பொய்யான செய்தி,
எவனோ என்னுடைய புரபைலில் புகுந்து அப்படியொரு செய்தியை போட்டிருக்கிறான். விஜய்யுடன் எனக்கு நல்ல நட்பு
இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரது
இந்த போஸ்டும் திடீரென நீக்கப்பட்டது.
என்னதான்
நடக்கிறது?
கே.வி.ஆனந்த் சொன்னது
போல் முதலில் இருந்தது எவனோ
உள்ளே புகுந்து போட்ட போஸ்டாம். அதை
மறுத்து ஆனந்த் போட்ட போஸ்டை
அவரேதான் மாற்றினாராம். விஜய் - அஜீத் ரசிகர்கள்
தன்னுடைய போஸ்டை முன்வைத்து அடித்துக்
கொள்வார்கள் என்று அதனை மாற்றினாராம்.
எல்லாம் சரி, விஜய்யை இயக்குகிறாரா
இல்லையா?
விஜய்க்கான
ஸ்கிரிப்ட் தயாரானால் நானே நேரடியாக விஜய்யிடம்
கால்ஷீட் கேட்பேன் என்கிறார். அப்போ கதை சொன்னதாக
சொல்லப்பட்டதெல்லாம் பொய்யா?
ஆண்டவனுக்கும்
ஆனந்துக்குமே வெளிச்சம்.
No comments:
Post a Comment