ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் விமானம், ஓடு தளத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று நின்றதால் பணியாளர்கள் தள்ளிச்சென்று ஓரங்கட்டினர்.
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சிந்த்வாரா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்காக விமானத்தில் ஏறினார். ஓடுபாதையில் சென்று கொண்டிருக்கும் போதே விமானம் கோளாறாகி நின்று விட்டது.
அதே நேரத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கமல்நாத் வந்து கொண்டிருந்த மற்றொரு விமானம் தரையிறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இரண்டு விமானத்தின் விமான ஓட்டிகளும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டனர்.
இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகானின் விமானத்தை ஓரம் கட்டும் வரை வானிலேயே வட்டமடிப்பது என்று கமல்நாத் விமானத்தின் ஓட்டுநர் முடிவு செய்தார். பின்னர் சிவராஜ் சிங் சவுகானின் விமான ஓட்டி அங்கிருக்கும் காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
அதன் பேரில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் முதல்வரின் விமானத்தை தள்ளிக் கொண்டு போய் ஓடுபாதையின் மற்றொரு பகுதிக்குக் கொண்டு சென்று நிறுத்தினர்.
பின்னர், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த கமல்நாத் பயணம் செய்த விமானம் சுமார் அரை மணி நேர தாமதத்திற்கு பிறகு முறையாக ஒடுபாதைக்கு கொண்டு வரப்பட்டு தரையிறக்கப்பட்டது. இதனால் நிகழவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

No comments:
Post a Comment