பிரிஸ்பேன் டெஸ்டின் போது இந்திய வீரர்களின் உடைமாற்றும் அறையில் குடுமிபிடி சண்டை நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிரிஸ்பேன் டெஸ்ட்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனின் கப்பா ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் 3-வது நாள் முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 71 ரன்கள் எடுத்து ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. 4-ம் நாள் காலையில் தான் ஆட்டத்தின் போக்கு தடாலடியாக மாறி போனது. அதற்கு சில சலசலப்புகளும் அச்சாரமாக அமைந்தன.
நான்காம் நாள் காலையில் புஜாராவுடன் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தான் களம் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக காலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஷிகர் தவானுக்கு எதிர்பாராத விதமாக வலது மணிக்கட்டில் பந்து தாக்கி காயம் ஏற்பட்டது. இருப்பினும் அது பற்றி உடனடியாக அணி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லாத தவான், கடைசி நேரத்தில் கையில் வலி அதிகமாக இருப்பதாகவும், அதனால் தன்னால் பேட் செய்ய இயலாது என்றும் கூறினார்.
டோனி சொன்ன தகவல்
அப்போது ஆட்டம் தொடங்க 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து ‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று அழைக்கப்படும் இந்திய துணை கேப்டன் விராட் கோலி அவருக்கு பதிலாக அவசரகதியில் களம் கண்டார். 11 பந்துகளை சந்தித்த அவர் ஒரு ரன்னில் மிட்செல் ஜான்சனின் வேகப்பந்துக்கு இரையானார். மேலும் சில விக்கெட்டுகள் மளமளவென சரியவே 45-வது நிமிடத்தில் தவான் களம் இறங்கினார்.
காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட் செய்த அவர் 81 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆனாலும் டெஸ்டில் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்தியா நிர்ணயித்த 128 ரன்கள் இலக்கை ஆஸ்திரேலியா எளிதில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது. தோல்விக்கு பிறகு பேட்டி அளித்த இந்திய கேப்டன் டோனி, தவான் காயமடைந்து தன்னால் ஆட முடியாது என்ற விவரத்தை மிகவும் தாமதமாக சொன்னதால் வீரர்களின் அறையில் திடீரென அமைதியின்மையும், குழப்பமும் நிலவியதாகவும், அது அணியின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் வேதனையுடன் கூறினார்.
நடந்தது என்ன?
இந்த நிலையில் வீரர்களின் அறையில் அன்றைய தினத்தின் காலையில் ஒரு களேபரமே நடந்துள்ள விவரங்கள் கசிந்துள்ளன.
பேட் செய்ய இயலாத நிலைமையில் இருப்பதாக கடைசி நேரத்தில் தவான் தெரியப்படுத்தியதும், அடுத்த வரிசையில் ஆட வேண்டிய துணை கேப்டன் விராட் கோலி அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ளார். தயாராவதற்கு போதிய அவகாசம் கொடுக்காததால் அதிருப்தியுடன் வேறு வழியின்றி களம் புகுந்த விராட் கோலி, துரதிர்ஷ்டவசமாக போன வேகத்தில் வெளியேற்றப்பட்டு விட்டார்.
தனது மோசமான ஆட்டத்திற்கு தவானே காரணம் என்று கருதிய கோலி, அறைக்கு திரும்பியதும் அவர் மீது பாய்ந்து விட்டார். உன்னால் தான் நான் அவசர அவசரமாக ஆட போய் சீக்கிரம் ஆட்டம் இழந்து விட்டதாக கோபத்துடன் கூறினாராம். காலையில் புத்துணர்ச்சியுடன் தொடுக்கும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு தாக்குதலை தவிர்ப்பதற்காக போலியாக காயம் நாடகம் ஆடியதாகவும் அவர் மீது கொந்தளித்து இருக்கிறார்.
சமாதானப்படுத்திய ரவிசாஸ்திரி
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தவானும் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றிருக்கிறார். ‘காயம் அடைந்து விட்டால் எப்படி பேட் செய்ய முடியும். நான் பொய் சொல்லவில்லை, நாட்டுக்காக உண்மையாக ஆடுபவன் நான்’ என்று மீசையை திருகியபடி பதிலடி கொடுத்திருக்கிறார்.
ஒருவரையொருவர் குற்றம் சாட்டி இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அறையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட இந்திய அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார். ‘இது ஒரு பெரிய விஷயம் அல்ல. எந்த ஒரு சூழலிலும் விளையாட ஒவ்வொரு வீரர்களும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்’ என்று கோலியை அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment