புதுவையில் அரவிந்தர் ஆசிரம குடியிருப்புகள் மீது மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
3 பேர் தற்கொலை
புதுச்சேரி வாழைக்குளத்தில் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ(வயது54), அருணா(52), ராஜஸ்ரீ(49), நிவேதிதா(48), ஹேமலதா(39) ஆகிய 5 பேரும் தங்கி ஆசிரமத்திற்கு சேவை செய்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆசிரம விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனால் அந்த 5 பேரும் தங்கள் பெற்றோர் பிரசாத், சாந்திதேவி ஆகியோருடன் கடந்த 18–ந் தேதி அதிகாலையில் சின்னகாலாப்பட்டு கடலில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதில் தாய் சாந்திதேவி, மகள்கள் அருணா, ராஜஸ்ரீ ஆகியோர் உயிரிழந்தனர். தந்தை பிரசாத், மகள்கள் ஜெயஸ்ரீ, ஹேமலதா, நிவேதிதா ஆகியோரை அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீட்டனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முழு அடைப்பு போராட்டம்
இந்த தற்கொலை சம்பவத்தின் போது ஹேமலதாவை அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் கற்பழித்தாக புகார் தெரிவித்தார். இது குறித்து காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பிள்ளைச்சாவடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (வயது30), ராஜு(35) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இதற்கிடைய 3 சகோதரிகள் சாவுக்கு காரணமாக ஆசிரம நிர்வாகத்தை கண்டித்தும், ஆசிரத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஆசிரத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்க், பல்பொருள் விற்பனை அங்காடி, தங்கும் விடுதி, ஆசிரம குடியிருப்புகள் கல்வீசி தாக்கப்பட்டன. இதில் அங்குள்ள கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
மீண்டும் கல்வீசி தாக்குதல்
இந்த நிலையில் நேற்று அதிகாலை புதுச்சேரி கடற்கரை சாலையில் டூப்ளே சிலை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அங்குள்ள ஆசிரமத்திற்கு சொந்தமான தங்கும் விடுதி மீது மீண்டும் கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் விடுதியின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து நேராக பாரதி பூங்கா அருகே சென்றது. அங்குள்ள ஆசிரமத்திற்கு சொந்தமான மற்றொரு தங்கும் விடுதியின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த குடியிருப்பு ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களால் அரவிந்தர் ஆசிரத்திற்கு சொந்தமான அனைத்து தங்கும் விடுதிகள், கட்டிடங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment